Thursday, August 12, 2010

காதல் தோல்வி

காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ

பரவாயில்லை என்று!!

Monday, August 9, 2010

புகைப்படம்....



















வல்லவனுக்கு வாச்சதெல்லாம் ஆயுதம்....!!!!!!!!!!






















பறவை எனும் விமானத்துக்குதான் எங்கே வேண்டுமானாலும் லேன்டிங் செய்யும் வித்தை தெரியும்.....!!!!









உண்மையாகவே இது சேற்றிடை மலர்ந்த செந்தாமரை தான்....!!!!!!!



வேதாரன்யத்தின்
மாலை பொழுது...





நான் வேதாரண்யம் சென்ற பொது கண்ட ஒரு பறவை....




நட்ட நடு நிசியில் வேளாங்கன்னியில் பக்தர்கள் .... பாதி தூக்கம்... மீதி பிரார்த்தனை...




எந்த மத்தாப்பூ பிரகாசமா இருக்கு..?




தெருவெங்கும் தீபாவளி...










Thursday, August 5, 2010

நசுங்கியது மனிதாபிமானம்..


நான் பயணம் செய்து கொண்டு இருந்தது தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று.தார் ரோட்டை பிளக்கும் வெயில்.எனது வண்டி 120 கி.மீ வேகத்தில் பறந்து கொண்டு இருந்தது . ஒரு கிராமத்தின் பிரிவு சாலை ஒன்று குறுக்கே வந்தது.
ஒரு 80 ,85 வயது பெரியவர் சாலையை கடக்க முயற்சி செய்து கொண்டுஇருந்தார்.. அவரது தலையில் ஒரு கூடை நிறைய தக்காளி இருந்தது.நான் எனது வண்டியை நிறுத்தினேன்.எனது வண்டியை அவர் கடக்கும் தருவாயில் எனக்கு பின்னால் வந்த வண்டி சடாரென்று நின்றது . நல்ல வேளை பெரியவருக்கு ஒன்றும் நேரவில்லை.
ஆனால் அவரின் ஒருகூடை தக்காளியும் ரோட்டில் சிதறியது.
எனக்கு பின்னால் வந்த எந்த ஒரு வண்டியும் அந்த சமயத்தில் அங்கு நிற்க வில்லை. அனைத்து வண்டிகளும் அந்த ஏழை கிழவனின் தக்காளியை நசுக்கிய படி சென்றது.
நசுங்கியது தக்காளி இல்லை..... மனிதாபிமானம்..