
நான் பயணம் செய்து கொண்டு இருந்தது தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று.தார் ரோட்டை பிளக்கும் வெயில்.எனது வண்டி 120 கி.மீ வேகத்தில் பறந்து கொண்டு இருந்தது . ஒரு கிராமத்தின் பிரிவு சாலை ஒன்று குறுக்கே வந்தது.
ஒரு 80 ,85 வயது பெரியவர் சாலையை கடக்க முயற்சி செய்து கொண்டுஇருந்தார்.. அவரது தலையில் ஒரு கூடை நிறைய தக்காளி இருந்தது.நான் எனது வண்டியை நிறுத்தினேன்.எனது வண்டியை அவர் கடக்கும் தருவாயில் எனக்கு பின்னால் வந்த வண்டி சடாரென்று நின்றது . நல்ல வேளை பெரியவருக்கு ஒன்றும் நேரவில்லை.
ஆனால் அவரின் ஒருகூடை தக்காளியும் ரோட்டில் சிதறியது.
எனக்கு பின்னால் வந்த எந்த ஒரு வண்டியும் அந்த சமயத்தில் அங்கு நிற்க வில்லை. அனைத்து வண்டிகளும் அந்த ஏழை கிழவனின் தக்காளியை நசுக்கிய படி சென்றது.
நசுங்கியது தக்காளி இல்லை..... மனிதாபிமானம்..
No comments:
Post a Comment